என்னைப் பற்றி
எனது தனிப்பட்ட வலைத்தளத்திற்கு வரவேற்கிறேன். நான் மத ஆய்வுக்கான துறையினைத் தளமாகக்கொண்ட ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் பீடத்தில் முனைவர் பட்டபின் ஆய்வாளர் தொடர்பவராகவுள்ளேன். எனது பல்துறைசாரந்த ஆய்வானது தெற்காசியர்கள், ஜரோப்பியர்கள் மற்றும்அமெரிக்கர்களுக்கிடையிலான வரலாற்றுச் சந்திப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகளினை பகுப்பாய்வு செய்கிறது. "எசமானாளர்களினைப் பயிற்றுவித்தல்: 1795- 1855 வரையான பிரித்தானிய இலங்கையில் அமெரிக்க கல்வி மற்றும் சாதி மேலாதிக்கம்” எனத்தலைப்பிடப்பட்ட அண்மையில் என்னால் பூர்த்தி செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரையானது, 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் அமெரிக்க மிஷனரி விடுதிப் பள்ளிகளில் சாதி, தேசம், பால்நிலை ஆகியனபின்னிப்பிணைந்திருந்தலினை அட்டவணைப்படுத்துகின்றது. 2016க்கும் 2017க்கும் இடையில், அமெரிக்க வுல்பிறைற்விருதினைப் (U.S. Fulbright award) பெற்று இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பதினான்கு மாதங்கள்ஆய்வுக்கட்டுரைக்கான ஆராய்ச்சிகளை நடாத்துவதற்காகச் செலவழித்தேன், அந்த நேரத்தில் பிரித்தானியநூலகத்தால் நிதியுதவி அளிக்கப்பட்ட இரண்டு ஆவணக்காப்பகத் தேடல் மற்றும் எண்ணிமப்படுத்தல்நிகழ்ச்சித்திட்டங்களிற்கு (EAP835/EAP971) தலைமை தாங்கினேன். எனது களப்பணிக்கு முன்பு, நான் நான்குஆண்டுகள் தமிழையும், இரண்டு ஆண்டுகள் சிங்கள மொழியையும் கற்றேன்: தற்பொழுது நான் எனது ஆரம்ப நவீனடச்சு மொழியில் வேலை செய்கிறேன். கருத்துக்களின் ஒப்பீட்டு வரலாற்றில் எனது இளமாணிப் பட்டத்தினைப் (2010, வொஷிங்டன் பல்கலைக்கழகம்) பெற்றுக்கொண்டுள்ளதோடு சமய கற்கைகள் மற்றும் தென்னாசியக் கற்கைகள் இரண்டிலும் முதுமாணிப்பட்டங்களினைப் (2015, இரண்டும் கொலம்பியப் பல்கலைக்கழகம்) பெற்று, மதக் கற்கையில் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் (2016, கொலம்பியப் பல்கலைக்கழகம்), மதக் கற்கையில் முனைவர்பட்டத்தினையும் (2020, கொலம்பியப் பல்கலைக்கழகம்) பெற்றுள்ளேன்.
என் பிரதிபெயர்கள் அவன் / அவனுக்கு.
எனது சுயவிபரத்தினை இங்கே பதிவிறக்கம் செய்யமுடியும்.
பொது அலவலக நேரத்தினை
தென்னிந்தியா மற்றும் இலங்கையின் வரலாறு மற்றும் மதம் தொடர்பான சுயாதீனமான அல்லது குடும்ப ஆராய்ச்சிபற்றி விவாதிக்கஇ கலந்துரையாடுவதற்கு ஆர்வமுள்ள எவருக்கும் ஆலோசிப்பதற்க்கு ஆர்வமுள்ள எவருக்கும்வாராந்த, பொது அலவலக நேரத்தினை நான் வைத்திருக்கிறேன். சந்திப்பைத் திட்டமிட என்னை m.balmforth@utoronto.ca இல் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து கேட்க ஆவலுடன்காத்திருக்கிறேன்!
நில ஒப்புதல்
பல மக்களின் பாரம்பரிய நிலங்களில் நான் ஒரு அழைக்கப்படாத விருந்தினர் என்பதை நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். நான் துவாமிஷ் மற்றும் சுக்வாமிஷின் சாலிஷ் நிலங்களில் பிறந்து வளர்ந்தேன். லெனேப், கனார்சி, மேட்டினாகாக், ராக்அவே மற்றும் மெரிக் ஆகிய பிராந்தியத்தில் பயிற்சி பெற்றேன். நான் தற்போது ஹூரான்-வென்டாட், செனெகா மற்றும் கிரெடிட் ஆற்றின் மிசிசாகாஸ் ஆகிய நிலங்களில் வாழ்கிறேன். நாங்கள் இன்று குடியேறியவர்களாக வாழும் இடங்களான நியூயார்க் மற்றும் டொராண்டோ என்று அழைக்கும் இடங்கள் ஆமை தீவு முழுவதிலுமிருந்து பல பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் நிலங்களில் வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.