ஆராய்ச்சி
கீழே எனது ஆராய்ச்சி ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தினையும் முதுகலைமாணிப் பட்டத்தின் பின்னரான செயற்பாடுகளிற்காக தற்போது முன்வைத்துள்ள இரண்டு செயற்றிட்டங்களின் சுருக்கமான அறிமுகத்தினையும் காணலாம் அத்தோடு நிறைவுசெய்யப்பட்ட இரு எண்ணிமச்செயற்றிட்டங்கள் பற்றிய ஓர் விபரிப்பினையும் கூட கீழே காணமுடியும்.
"Tamil Girls in a Boarding-School," Mary and Margaret W. Leitch, Seven Years in Ceylon: Stories of Mission Life, New York: American Tract Society, 1890, 117.
"Jaffna," Robert Breckenridge, 1847. Source: Mount Holyoke Archives
Berlin Needlework Sampler, Jane S. Perviance, 1848. Source: Smithsonian Museum
ஆய்வுக்கட்டுரைச் செயற்றிட்டம்: “அதிகாரி பாடங்கள்: பிரிட்டிஷ் இலங்கையில் சாதி மேலாண்மையும் அமெரிக்க கல்வியும், 1796–1855”
19ஆம் நூற்றாண்டின் ஆவணக்காப்பக பல்வேறு வகைப்பட்ட ஆவணங்களான மிசனரி, காலனியக் குறிப்புகளிலிருந்து கையால் வரையப்பட்ட வரைபடங்கள் வரை, அலங்காரத்தையல் மாதிரிகள் மீது கவனம் செலுத்துவதோடு, இலங்கையில் கிடைக்கப்பெற்ற காலனியகாலக்கலை இலங்கைத்தீவில் அதுவும் யாழ்ப்பாணத்தவரிடம் மேலாதிக்க அடையாளக் கட்டமைப்பு உருவாக்கத்தை எவ்வாறு எளிதாக்கியது, அதன் விளைவுகள் என்பவற்றை எனது ஆய்வுக்கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது. கல்வியானது யாழ்ப்பாணத்தின் நிலவுடமையாளர்களான வெள்ளாள சாதியினைச் சார்ந்தோருடன் தொடர்புற்றதாகக் காணப்பட்டது என்பதனையும் ஐரோப்பிய அமெரிக்க புரட்டஸ்தாந்து மிசனரிகள், பிரித்தானிய காலனிய நிர்வாகம் ஆகியன கல்வியைத் தளமாகக் கொண்ட உறவுக்கு எவ்வாறு பரஸ்பர ரீதியான ஆதரவளித்தன இவற்றையும் ஆய்வுக்கட்டுரை விவாதிக்கின்றது.
ஆய்வுக்கட்டுரை இரண்டு பாகங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி யாழ்ப்பாணத்தின் கல்வி ரீதியான இணைவுகளின் ஒழுங்கமைப்பினை அட்டவணைப்படுத்துகின்றது. இரண்டாவது பகுதி இவ்விணைவுகளின் மூன்று வெளிப்பாடுகளினைப் பேசுகின்றது. சைவப்புலவரும் ஆசானுமாகிய கூழங்கைத் தம்பிரானின் (1669? - 1795) திண்ணைப்பள்ளிக்கூடத்தினை பற்றிய விடயங்களினை பரீட்சித்தலின் வழியாக 19ஆம் நூற்றாண்டின் திருப்பத்தில் யாழ்ப்பாணத்தின் மேலாண்மையினரான தமிழரின் கல்விக்கான மாதிரியினையும், யாழ்ப்பாண வெள்ளாள சாதியினருடனான அதன் இடையினைப்பினையும் அத்தியாயம்1 அறிமுகம் செய்கின்றது. தமிழ் மொழி பேசத்தக்க கிறிஸ்தவ சமயப்பற்றாளனும்பிரித்தானியரின் கீழ் காலனியகால மதகுருவாகவும் இருந்த கிறிஸ்ரியன் டேவிட் (1771 - 1852) தனது ஜேர்மன் பீடியன் மிஷனரி பயிற்றுவிப்பாளர்களின் பணியினைக் கட்டியெழுப்புவதற்க்கு ஆளத்தக்க இலங்கையர்களினை உருவாக்குவதற்காய் வடிவமைக்கப்பட்ட ஓர் பாடசாலையினை உருவாக்குவதன் மூலம் யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட கல்வி முயற்சிகளினை அத்தியாயம் 2 பின்தொடர்கின்றது. 3ஆவது அத்தியாயம் ஆய்வுக்கட்டுரையின் பகுப்பாய்வுப் பாகமாகும் இங்கு 1816இலிருந்து அமெரிக்க சிலோன் மிசனரிப் பாடசாலைகளின் பரவலின் மீது கவனம் செலுத்துவதனூடாக யாழ்ப்பாணத்தின் கல்விரீதியான இணைவுகளின் அடித்தளத்தினையும் மிசனரியின் சாதிரீதியான செயற்பாடுகளின் முடிவுகளினையும் பகுப்பாய்வு செய்கின்றது. அத்தியாயம் 4 புவியியல்பாட போதனாமுறைமையில் அமெரிக்காவின் தேசிய முறைமையான தேசப்படங்களினை வரைதல் மூலம் தேசியவாதத்தினை வளர்த்தல் எனும் புவியியல் போதனாமுறைமை இலங்கை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு காலனிய நவீனத்துவத்தின் கல்வி போதிக்கும் முறைமை மூலம் இறக்குமதி செய்யப்பட்டதனை விவாதிக்கின்றது. அத்தியாயம்5இல் அலங்காரத்தையலின் மாதிரிகள் உள்ளன. யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தின் வீடுசார்ந்த அழகியல் மற்றும் பால்நிலையோடு அலங்காரத்தையலுக்கான தொடர்பு பற்றிய விடயங்களினை அத்தியாயம்5 பேசுகின்றது. இறுதியாக 6ஆவது அத்தியாயத்தில் அமெரிக்க மிசன் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட எண்ணிலடங்கா ஆவணங்களின் மீது பார்வை செலுத்துவதோடு வெள்ளாளக் கிறிஸ்தவ வாசகர்களின் வளர்ச்சிக்காய் அதன் குரல் கொடுத்தல் பற்றியும் மதிப்பாய்வு செய்கின்றது.
கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியின் நிதியுதவித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்தச்செயற்றிட்டம் பின்னர் வுல்பிறைற்றின் (Fulbright) அமெரிக்க மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இலங்கைக்கற்கைகளுக்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து பெருந்தொகையான நிதியுதவியினைப் பெற்றுக்கொண்டது.
செயற்றிட்டத்தின் திறவுச்சொற்கள்: இலங்கை, யாழ்ப்பாணக்குடாநாடு, தமிழர் சமூக வரலாறு, கிறிஸ்தவ மிசன், கல்வி, பால்நிலை, ஆசிரியப்பணி, தேசப்பட வரைபடவியல், அலங்காரத்தையல்வேலை.
அச்சிடல்வேலை முடிவுறும் திகதி: மே 2020
Detail of Portrait of Philippus Baldaeus and Gerrit Mossopotam, Johan de la Rocquette, 1668, Rijksmuseum, Amsterdam
"Palampore" wallhanging. Source: Metropolitan Museum of Art, New York, 2010.337
Source: "Oldenlandia umbellata," anonymous Indian painter in William Roxburgh, Plants of the Coast of Coromandel, London: W. Bulmer and Co., 1795, Plate 3.
கலாநிதிப்பட்டத்தின்பின்னான செயற்றிட்டம் 1: 1660 தொடக்கம் 1960 வரை இந்து சமுத்திரத்தில் அடிமைத்தனத்தின் அழகியல்: உழைப்பு, புடவை, சாதி
வாழ்க்கை மற்றும் இரத்தத்தின் வர்ணமான பிரகாசமான சிவப்புநிறப் புடவைகள் ஐரோப்பா மற்றும் தெற்காசிய அழகியல் உணர்வில் மிகவும் விரும்பத்தக்கனவாயிருந்தன.இவற்றினை 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உள்ளுர் பொருட்களால் தயாரிக்க முடியாதிருந்தன. 1660 - 1850களுக்கிடையில் தென்னிந்தியா சுழ்ந்திருந்த கடற்கரையோரம் மற்றும் இலங்கையில் கிடைத்த ஓர் ஊகிக்கமுடியாத தாவரம் ஐரோப்பாவின் செல்வத்திற்க்கு ஓர் மூலமாகியதோடு இந்தியாவிலிருந்து தமிழர்களினை இலங்கைக்கு அடிமைகளாகக் கொண்டுவந்து மீள்குடியேற்றம் செய்யவும் காரணமாகியது.
தென்இந்தியர்கள் மண்ணிலிருந்து தோண்டியெடுத்து சாயமிடப் பயன்படுத்திய தாவரத்திற்கு ஒல்டன்டியா உம்பலாட்ட எல் (Oldenlandia umbellata L) எனும் விஞ்ஞானப் பெயரினை கார்ல் லின்னேயஸினால் வழங்கப்பட்டபோது இத்தாவரம் ‘சாயவேர்’ என சாதாரணமாக அறியப்பட்டது. தமிழில் இது ‘சாயவேர்’ எனவும் தெலுங்கில் இது ‘சீர்விவேலு’ எனவும் அழைக்கப்பட்டதோடு ஆங்கிலத்திலும் இது ‘சாயவேர்’ அல்லது ‘சாயா’ என இதன்பெயர் ஆங்கிலமயமாக்கப்பட்டது. இலங்கையின் வடபிராந்தியத்தீவுகள், மேற்குக்கடற்கரையோரங்களிலிருந்து பெறும் தாவரங்கள் அருகிலுள்ள இந்தியக்கரையோரங்களிலிருந்து பெறும் வேர்களினை விட மிகவும் வலுவானவை அதேபோல சாயவேரின் துணைவகைகளும் இவற்றுக்கு ஒத்த பெறுமதியானவையல்ல. 1660களில் வெளிநாட்டுக் கோரிக்கைகளை சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாகவும், தங்கள் பிராந்தியங்களின் வருமானம் பெறும் திறனை அதிகரிப்பதற்க்குமாக ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி சிவப்பு,நீல வர்ணச்சுவர்த்தொங்கல்கள்மற்றும் இன்று ‘சீத்தை’ எனப் பொதுவாக அறியப்படும் சாயப்புடவைகளினை தயாரிப்பதற்காக இலங்கையினைத் தளமாகக்கொண்ட ஓர் தொழிற்சாலையினை அமைத்தது. இந்த தருணத்தில் தென் இந்தியா முழுவதும் பெரும் பஞ்சம் தோன்றுகிறது இதனால் உணவுக்காகவும், தங்களது வயிற்றை நிரப்புவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் அடிமைகளாக்கப்பட்டனர். இவ்வாறு அடிமைகளாக்கப்பட்ட சிலர் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் சொத்தாக்கப்பட்டு இலங்கையில் சாயவேர்களினைப் பிடுங்குவதற்காக அமர்த்தப்பட்டிருந்தனர். 1795- 1796 இடையில் ஒல்லாந்தரிடமிருந்து இலங்கைத்தீவு பிரித்தானியருக்கு கைமாறும்போது இச்சாயவேர் கிண்டும் அடிமைகளின் உரிமைத்துவமும் கைமாற்றப்பட்டதனை ஒல்லாந்த ஆவணங்கள் காட்டுகின்றன. இவ்வாறு அடிமைகளாக இருந்த இவர்கள் 1844இலே பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றுள்ளனர்.
இந்தச் செயற்றிட்டமானது தாவரவியல், கலைவரலாறு, உலகளாவிய அடிமைத்தனம் பற்றிய ஆய்வு ஆகியவற்றோடு தொடர்புறுவதோடு, 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அடிமைகளாக்கப்பட்ட தமிழச்சாயவேர் கிண்டும் குழுவிடமிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் வாழுபவர்கள் வரையாகப் பின்தொடர்கின்ற ஓர் பயணமும் ஆகும். ஒல்லாந்த, பிரித்தானியகால காலனிய பதிவுகள், குறித்த துறைகள் சார் இரண்டாம்நிலை இலக்கியங்கள், சாயவேர் கிண்டுபவர்களின் வழித்தோன்றல்களின் நேர்காணல்கள், தாவரவியல் வரைபடவியல் முறைமை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதன்வழியாக உலகளாவிய, தென்னாசிய அடிமைத்தனத்தின் வரையறைகளினை இவ்வாய்வு புலப்படுத்தும்.
இந்தச் செயற்றிட்டமானது தமிழ்க்கற்கைகளுக்கான ஹாற்றின் நிதியுதவித்திட்டத்தின் கீழ் (Hart Fellowship) பெருந்தன்மையான ஆதரவினைப் பெற்றுள்ளது.
செயற்றிட்டத்தின் திறவுச்சொற்கள்:தமிழ் சமூக வரலாறு, அடிமை, சாதி, புடவை, தாவரவியல், இந்து சமுத்திரம், குடிப்பெயர்வு, சாயம், ஒல்டென்டியா உம்பலற்றா, சீத்தைத்துணி
Source: Cambridge University Library
கலாநிதிப்பட்டத்தின்பின்னான செயற்றிட்டம் 2: ஸ்வேட்ஸின் கிறிஸத்தமான உபதேச விளக்க பகுப்பாய்பு
18ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் மிக முக்கிய மிசனரியினைச்சார்ந்த ஜேர்மானிய ஆழ்ந்த சமயப்பற்றாளனாகிய கிறிஸ்ரியன் பிரட்ரிக் ஸ்வேட்ஸ் (1726 - 1796) அவரது எழுத்துக்களால் மட்டுமன்றி அவரது போதனை, சுவிசேஷம், இராஐதந்திரம் ஆகியவற்றாலும் அறியப்பட்டவர் என றொபேர்ட். ஈ. விறைக்கின்பேர்க் விபரித்துள்ளார். யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணக்காப்பகம் (தகவல் கீழே) தமிழ் பேசும் சமயப்பயிற்சியாளர்களுக்காக தமிழில் கையால் எழுதப்பட்ட போதனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் 386பக்கங்களுடைய ஒரே ஒரு நகல் ஸ்வேட்ஸின் கிறிஸத்தமான உபதேச விளக்கம் ஆகும். இது 1780களில் தொகுக்கப்ட்டிருக்கலாம். தென்னிந்தியாவில் புரட்டஸ்தாந்து மதம் விநியோகிக்கப்பட முக்கியமானதான தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆழ்சமயப்பற்றாளனின் கிறிஸ்தவ அறிவினது மொழிபெயர்ப்பின் மீது தனித்துவமான பார்வையினை வழங்குகின்றது.
இதனது பகுப்பாய்வுக்கும் மேலதிகமாக இதன் மொழி பெயர்ப்புக்கும் நான் பங்களிப்புச் செய்துகொண்டிருக்கிறேன். பேராயர் சி. ஜெபநேசன் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இம்மொழி பெயர்ப்பு வேலைகளினை மேற்பார்வை செய்தல், மொழிபெயர்பு முடிவுகள் பற்றிய ஆலோசனைகளினை வழங்குவதோடு மொழிபெயர்ப்பினைத் தொகுத்தல் மற்றும் விபரிப்புக் குறிப்புகள் எழுதுவதிலும் ஈடுபட்டுள்ளேன்.
செயற்றிட்டத்தின் திறவுச்சொற்கள்: சி. எவ். ஸ்வேட்ஸ், தென் ஆசியாக் கிறிஸ்தவம், டானிஸ் ஹோல் மிசனரி, தரங்கம்பாடி, ஆழ்சமயப்பற்று, தமிழரின் சமூக வரலாறு, கிறிஸ்தவக் கோட்பாடு, கல்வி
நிறைவடைந்த செயற்றிட்டங்கள்
The team conducted twelve surveys of institutional and privately-held archives. The black liquid on the floor of this archive is motor oil, used as rudimentary protection from insects. Photo Credit: Henria Aton
Distributing project information at Tellippalai church. Photo Credit: Henria Aton
Kirubalini Stephan (center) leading a digitization demonstration during our two-month training program for university students and Jaffna librarians. Photo Credit: Mark E. Balmforth
Mirusha Kumarakulasingham (right) distributing project information at Manipay church. Photo Credit: Mark E. Balmforth
யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணக் காப்பகம் EAP835/971
2016 - 2018 வரையான காலத்தில் நான் யாழ்ப்பாணப் பரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணகத்தினை முகாமை செய்து வந்தேன். இவ்ஆவணகமானது இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புரட்டஸ்தாந்து சமூகத்தினரது கையால் எழுதப்பட்ட மற்றும் பதிப்பிக்கப்பட்ட அரிய ஆவணங்களினது விவரங்களினை சேகரித்ததோடு 40 000க்கும் மேற்பட்ட பக்கங்களினை எண்ணிமப்படுத்தியுள்ளது. இச்செயற்றிட்டத்தின் கீழ் எண்ணிமப்படுத்தப்பட்ட எல்லா ஆவணங்களும் பிரித்தானிய நூலகத்தின் அரிதான ஆவணங்களின் காப்புத் தொடர்பான செயற்றிட்டம் ( ஆங்கிலத்தில்), நூலகம் எண்ணிம ஆவணகம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) மற்றும் எமது செயற்றிட்ட வலைத்தளம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்). கொலம்பிய பல்கலைக்கழகப் பேராசிரியர் இ.வலன்டைன் டானியல் மற்றும் நூலகம் அமைப்பு ஆகியோரின் கூட்டிணைவோடு என்னால் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தை பிரித்தானிய நூலகத்தின் அரிதான ஆவணங்களின் காப்புத் தொடர்பான செயற்திட்டத்தின், ஆக்காடியாவின் நிதியுதவியுடனே இதனை சாத்தியப்படுத்தமுடிந்தது. நான், எனது சக செயற்றிட்ட முகாமையாளரான ஹென்றியா அதோன் மற்றும் யாழ்ப்பாணத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரிபன் கனகலிங்கம், ஸ்ரிபன் கிருபாலினி, சுதர்சினி ராமகிருஸ்ணன், மிருசா குமாரகுலசிங்கம் ஆகியோர் உட்பட ஆறு நபர்களினால் வளர்ச்சியடைந்ததே இச்செயற்றிட்டம்
EAP835/971 எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்துக்கு மேலதிகமாக தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான எண்ணிமப்படுத்தல் கையேடு, ஆவணகத்திலுள்ள ஆவணங்களினை எவ்வாறு கையாளல் மற்றும் பேணிப்பாதுகாத்தல் பற்றிய அடிப்படையான அறிவுரைகளுடன் கூடிய ஓர் சிற்றேட்டினையும் வடிவமைத்துள்ளேன். இச்சிற்றேடானது நூலகம் அமைப்பு மற்றும் யாழ்ப்பாணத்தினை வசிப்பிடமாகக் கொண்ட வல்லுனரான ஜீவரத்தினம் ஜெயதீஸ் ஆகியோரின் கூட்டிணைவுடன் வடிவமைக்கப்பட்டது.
இச்செயற்றிட்டமானது எனது ஆய்வுக்கட்டுரைக்கான ஆராய்ச்சிக்குத் (மேலே விபரிக்கப்பட்டுள்ள) தொடர்புடைய ஆவணங்களினை முடிந்தளவுக்குத் தேடிக்கண்டுபிடித்தலாகவே தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆவணகங்களின் பாரியளவிலான பரம்பரையியல் பண்பு ஆங்கில மொழி, ஆண்கள், மேலாண்மைச் சாதி சார்ந்து காணப்பட்டதன் காரணமாக எங்கள் செயற்றிட்டமானது வெளிப்படையாக பிரதிநிதித்துவப்படுத்தப்படாக குரல்களான தமிழ் ஆவணங்கள், பெண்களால் எழுதப்பட்ட, மேலாண்மையற்ற சாதியினைச் சாராதவர்களால் உருவாக்கப்பட்டதும் இன்று எஞ்சியுள்ளதுமான ஆவணங்களினை மீட்டெடுக்க முயன்றுள்ளது.
Kirubalini Stephan (center) and Henria Aton (right) distributing project information at Manipay church. Photo Credit: Mark E. Balmforth
யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம நூலகம்
EAP 835/971கீழ் எண்ணிமப்படுத்தப்பட்ட ஆவணங்களினை சமூகத்திற்க்கு அணுகத்தக்கதாக அமையும் வகையில் யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம நூலகமானது 2016இல் உருவாக்கப்பட்டதோடு யாழ்ப்பாணத்தின் புரட்டஸ்தாந்து வரலாற்றுடன் தொடர்புடைய பிரதானமான எண்ணிம வடிவிலான ஆவண மூலங்கள், காண்பிய ஆவணங்களினை காட்சிப்படுத்துவதற்க்கும் சேகரிப்பதற்க்குமான ஒன்றாக இது விரிவடைந்துள்ளது. ஹென்றியா அதோன் இதன் மற்றுமோர் வலைத்தள முகாமையாளர் மற்றும் ஆவணக்காப்பாளர். ஹென்றியாஅதோனும் நானும் இல் எண்ணிமப்படுத்தப்பட்ட 40 000 பக்கங்களினையும் தமிpலும் ஆங்கிலத்திலும் தேடத்தக்கதும் அணுகத்தக்கதுமாக வலைத்தளத்தில் இணைக்கும் செயற்பாட்டில் உள்ளோம்.
அருளம்பலம் குடும்பம் மற்றும் ஆராய்ச்சிக் கற்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் பெருந்தன்மையான ஆதரவுடன் யாழ்ப்பாணத்தினைத் தளமாகக்கொண்ட இரு அரிய ஆவணச்சேகரிப்புக்களான பேராயர் சபாபதி குலேந்திரனின் (1900-1992) எழுத்துக்கள் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டம் தென்னிந்திய திருச்சபையில் காணப்பட்ட உதய தாரகை பத்திரிகையின் (1841-1983) சேகரிப்புக்கள் ஆகியவற்றை யாழ்ப்பாணப் புரட்டஸ்தாந்து எண்ணிம நூலகம் தன்னகத்தே உள்ளீர்த்துள்ளது. பேராயர் சபாபதி குலேந்திரனின் எழுத்துக்களது சேகரிப்பினை எண்ணிமப்படுத்தல் 2017 ஆகஸ்டில் நிறைவுசெய்யப்பட்டது அத்தோடு ஆகஸ்ட் 2018இல் உதயதாரகை பத்திரிகையின் எண்ணிமப்படுத்தல் நிறைவுசெய்யப்படும். இவ்விரு சேகரிப்புகளினையும் இணைக்கும்போது 14000 பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன.